இ- பாஸை ரத்து செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இ- பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், கொரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Image
Comments