அரியலூரில் இருந்து சுண்ணாம்பு கல்களை லாரியில் ஏற்றி கொண்டு சேலம் மாவட்டம் சங்கரிக்கு ஓட்டுநர் ஐயப்பன் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவில் தாமரை குளம் அருகே வந்தபோது லாரி கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரி ஒட்டுநர் ஐயப்பன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்ததால் தான் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிந்தது. இதற்கு ஆர்டிஓ முறையாக இரவு நேரத்தில் வாகன தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments