Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அஸ்வின் உணவகத்தில் குடிபோதையில் ஆசிரியர் தகராறு – பரபரப்பு

திருச்சி கே.கே.நகரில் நேற்றிரவு (07.11.22)  அஸ்வின்ஸ் உணவகத்திற்கு வந்த  நபர் அங்கிருந்த ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் அவர் இருந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் கே.கே.நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர் அந்த போதை ஆசாமியிடம் பேச வந்த போது   காவலரை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

அந்த நபர் ….. நான் யார் தெரியுமா உன் இன்ஸ்பெக்டர் என் மாணவன் நான் கோடீஸ்வரன் தலைமை ஆசிரியர் என கூறினார். அவரை அமைதிப்படுத்த முயன்ற காவலரை தகாத வார்த்தைகளால் பேசி அவரது செல்போனை கீழே தட்டிவிட்டு காவலரை தாங்கினார். போதை ஆசாமியின் ஆட்டம் அதிகமானதால் காவலர் ரோந்து வாகனத்தை வரவழைத்தார். போலீஸ் வாகனம் வருவதை பார்த்த அந்த நபர் தள்ளாடியபடியே தனது காரில் ஏறி எஸ்கேப் ஆக முயன்றார்.

நிற்க முடியாத நிலையில் அவர் இருந்ததால் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த நபர் தான் வந்த காரில் அமர்ந்து மது அருந்தி பின் அஸ்வின் உணவகத்தில் அமர்ந்து நொறுக்கு தீணிகளை சாப்பிட்டது போலீசார் தெரிந்து கொண்டனர்.  போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த  நபர் கே.கே.நகரை சேர்ந்த ரபூஃக் என்பதும்  திருச்சி காஜாமியான் பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இதனால் அஸ்வின் உணவகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *