திருச்சி பீமநகர் பஞ்சுமில் கிடங்கு பகுதியை சேர்ந்த தமிமுன் அன்சாரி (43). தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து, தாயையும், தம்பியையும் அடித்து உதைத்துள்ளார். இதனால், நேற்றிரவு தமிமுன் அன்சாரியை அவரது தாயும், தம்பியும் சேர்ந்து கழுத்தில் மின்சார வயரை இறுக்கி கொலை செய்திருக்கிறார்கள்.
அவரது உடலை கொள்ளிடம் ஆற்றுக்குள் தூக்கி போடுவதற்காக வந்தபோது, அது முடியாமல் போகவே கொள்ளிடம் பாலத்திலேயே போட்டு விட்டு சென்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து, அவரது தாயையும், தம்பியும் பிடித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments