தமிழகத்தில் திண்டிவனத்தில் பிறந்தவர் டாக்டர் நஸ்ரின் பேகம்.2008 ஆம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேதிக் கல்லூரியில் ஆயுர்வேதிக் மருத்துவம் படித்து மருத்துவராகியுள்ளார்.மருத்துவ பணிக்காக 2013ல் துபை சென்றுள்ளார். 2017 ஆண்டு முதல் MOH மருத்துவ உரிமம் பெற்றுள்ளார்.
இவர் திருச்சியில் சபீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .மூன்று வருடங்களுக்கு மேலாக துபையில் ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னர் பார்ட்னராக பணியாற்றி வருகிறார்.துபாய் பொறுத்த அளவில் 20 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு தான் கோல்டன் ஸ்டார் விசா வழங்குவார்கள்.முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஆயுர்வேதிக் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது பெருமைபட வேண்டிய ஒன்று.
சிறிய நாடான அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான இத்தகைய கௌரவ விசாக்களை வழங்குகிறது. அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகையை கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசா தமிழகத்தில் சேர்ந்த முதல் பெண் மருத்துவருக்கு கிடைத்து இருப்பது ஆயுர்வேதிக் மருத்துவத்திற்கே பெருமையைப் சேர்த்துள்ளது.
இந்த விசா பெற்றவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதுமானது. கிட்டத்தட்ட அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள். தங்கள் நாட்டு முதலீட்டாளர்களைக் கௌரவிக்கவும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும் தொழிலறிவு படைத்த மக்களை ஊக்கப்படுத்தவும் இத்தகைய நடைமுறையை அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. இது வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மட்டுமல்ல ஏராளமான மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் திரைப்பட நடிகர்களும் மே 19 2019 திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கோல்டன் விசா கிடைக்கப் பெறுகின்றது.
தமிழகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை தன்னுடைய பெற்றோர் சையது பஃதா,நசிமா பேகம் இருவருக்கும் சமர்ப்பணம் செய்தவதாக நெகிழ்வுடன் கூறுகிறார் நஸ்ரின்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
https://t.me/trichyvisionn
Comments