Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சூர்யா சிவா மீது சாட்டை துரைமுருகன் புகார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார் அந்த மனுவில்……. 

அனுப்புநர் :

துரைமுருகன் (எ) சாட்டை துரைமுருகன், (வயது 36). த.பெ. அருணாச்சலம், பிளாட் எண். 746, 7வது குறுக்கு தெரு. சண்முகாநகர், வயலூர் ரோடு. உய்யகொண்டான் திருமலை. திருச்சிராப்பள்ளி.

பெறுநர் :

1.உயர்திரு. காவல் ஆணையர் அவர்கள், காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி மாநகரம்.

உயர்திரு. காவல் ஆணையர் அவர்கள், சைபர் கிரைம் காவல் நிலையம். சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை ரோடு. திருச்சிராப்பள்ளி.

நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். “நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறேன். மேலும் “சாட்டை” என்கிற வலையொளி (Youtube) சேனல் ஒன்றும் நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு ஆண் மகன்களும் உள்ளனர். நானும் எனது குடும்பமும் சமூகத்தில் நல்ல மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த (28.05.2024) அன்று நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் “திரு. திருச்சி சிவா” அவர்களின் மகன் “திருச்சி சூர்யா” என்பவர் 5 தமிழ்” என்ற யூடியூப் சேனலில் என்னைப் பற்றியும், என் மனைவியை பற்றியும் நாக்கூகம் வகையில் மிகவும் தரக்குறைவாகவும், கேவலமாகவும் அருவருக்கதக்க வகையிலும் பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது “சீமானுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை விசாரிச்சு பாத்தீங்கனா ரொம்ப கேவலமா இருக்கும், ஒரு விதவைக்கு வாழ்க்கை குடுக்க போரென்னு சொல்லிட்டிருந்தார். அது யாருனும் சொல்ரேன். அது “முத்துக்குமார்”னு சொல்லி நாம் தமிழர் கட்சியின் உண்மையான ஒனர் அவர்தான். திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார். அப்ப அந்த கட்சியை தூக்குறதுக்காகவும், அவர் மனைவியின்மேல் இருக்கிற சொத்துக்களை அடையறுதுக்காகவும் அவர் மனைவியை தூக்கனும், ஆனா இப்ப அவங்கள யார் கல்யாணம் பண்ணியிருக்கர் தெரியுமா? சாட்டை துரைமுருகன். அவருக்கு புதுக்கோட்டையில் காம்ப்ளக்ஸ்ல இருந்து வர மாச வாடகையே ஐம்பது இலட்சம். என்னமோ எனக்கு யூடியூப் சேனல்ல வருமானமே இல்ல.

நான் ஆயிரம் ரூபாய்க்கு கஷ்டப்படுரேனு சொல்ராரு. அதெல்லாம் சும்மா இவங்க எந்தளவுக்கு கிரிமினாலிட்டி அப்படினா, சாட்டை துரைமுருகன் திருமணம் பன்றப்போ முத்துக்குமாரோட மனைவி பிரக்னன்டா இருந்தாங்க, சீமானும், சாட்டை துரைமுருகனும் மாத்தி மாத்தி யார் கல்யாணம் பண்ரதுனு சண்டை போட்டாங்க, இரண்டுபேரும் மாத்தி மாத்தி போன் அடிச்சி அந்த புள்ளைய உயிர எடுக்குராய்ங்க, ஆனா அந்த பொண்ணோட அப்பா என்னை செய்ராருனா சீமான் சினிமாக்காரன் என்பதால சாட்டை துரைமுருகனுக்கு கட்டி கொடுக்கிறார். ஏன் சாட்டை துரைமுருகன் எத செஞ்சாலும் சீமான் நம்பிக்கையா புடிச்சிட்ருக்கார்னா இதான் கதை. இத கேக்கரப்போ நம்மளுக்கே நாராசமா இருக்குதா இல்லையா? சாட்டை துரைமுருகன் சொத்தை கைப்பற்றினாரு, சீமான் கட்சியை கைப்பற்றினாரு.

அது மட்டுமில்லாம முத்துக்குமாருடைய சமாதி பேச்சிபொருளாக இருக்குதுனு அவரு சமாதியவே அழிச்சிட்டாயங்க எவ்வளவு பெரிய துரோகம் பாத்தீங்களா? அவரது கட்சியும் தூக்கிட்டாய்ஙக அவரு கொழந்தையையும் அழிச்சிட்டாய்ங்க அவருபொண்டாட்டி பேருல இருந்த சொத்தையும் தூக்கிட்டாய்ங்க, அவரு சமாதியும் தூக்கிட்டாய்ங்க” என்று என்னையும் என் மனைவியையும் மிகத்தரக்குறைவாக பேசியுள்ளார்.

மேலும் அந்த காணொளியில் கூறியிருப்பதாவது, “சாட்டை துரைமுருகன் சுபாவமே என்னன்னா அவன் வந்து சவுக்கு சங்கர் பார்ட்-2. அது புரோக்கர் -1, இது புரோக்கர் -2 இந்த புரோக்கர் என்ன செய்யும்னா ஒரு எடுத்துக்காட்டுக்கு 26.05.2024 அன்று 8.50 மணியளவில் x வலைதளத்தில் இவர் சிறையில் இருந்து வெளியே வந்ததே அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் TRB ராஜா உதவியினாலதான். ஆவங்கதான் உதயநிதிக்கிட்ட பேசி ஃபிரீ பண்ணிவிட்டாய்ங்க. அவர் சிறைச்சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி இனி எந்தப் பதிவும் யூடியூப்ல போடமாட்டேனு எழுதி கொடுத்துதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தாரு ஆம்பளயா இருந்தா அவன் சாட்டைங்குற சேனல்ல அமைச்சர் உதயநிதி பற்றி வீடியோ போடச்சொல்லுங்க பார்ப்போம்.

திருச்சியில ஸ்ரீரங்கத்தோட சட்டமன்ற உறுப்பினர் கல்குவாரி வச்சிருந்தாரு. இல்லீகல் மைனிங் பன்னிட்டிருந்தாரு. ஆதபத்தி ஒரு வீடியோ இவன் போட்ரான், அப்புறம் அந்த MLA கிட்ட பேரம் பேசிட்டு அந்த வீடியோவ எடுத்துட்டான்” அருவருக்கதக்க வகையில் பேசியுள்ளார். அந்தக் காணொளியை அவரது “X” தளத்திலும் வெளியிட்டுள்ளார் மற்றும் இதை போன்று 25.03.2024 அன்று Tribes என்ற யூடியூப் சேனலில் என்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதன் மூலம் என் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்கிற அச்சம் ஏற்படுகிறது.

எனவே அய்யா அவர்கள் என்னையும், என் மனைவியையும் மிகக் கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசி அவதூறு செய்த மேற்சொன்ன “திருச்சி சூர்யா” என்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், எங்களை பற்றி அவதூறாக பேசப்பட்டுள்ள அந்த காணொளியை அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் முற்றிலும் நீக்கும்படியும் அய்யா அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *