Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

துரைமுருகன் மீது பாய்ந்தது பிசிஆர் வழக்கு

A.K. அருண் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின்படி, கடந்த (08.07.2024)-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலின் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் கடந்த (08.07.2024) www.youtube.com/@NaamThamizhar katchi இறுதி கட்ட பரப்புரை ஒரத்தூர் பொதுக்கூட்டம் என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும்,

 மேற்படி வீடியோவில், சண்டாளா என்று பட்டியல் இன சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தும் விதமாக பொதுவெளியில் பேசியுள்ளார் என்றும், மேலும் “கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி. பொன்னான தமிழ்நாட்டை மண்ணோடு மண்ணாக புதைத்திட்ட கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி, ஒரு சதிகாரன் கருணாநிதி என்று பேசியுள்ளார் என்றும், பொது இடத்தில் இவ்வாறு பட்டியிலினத்தவரை உள் நோக்கத்துடன் இழிவுபடுத்தும் விதமாகவும். அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார் என்றும்,

இவ்வாறான அவரின் செயல் மற்றும் பேச்சு சாதிரீதியாக பட்டியலினத்தவர்க்கும் மற்ற சமூகத்தினருக்கு இடையே சாதி மோதலை உருவாக்கும் விதமாகவும். மேலும் மறைந்த ஒரு கட்சித் தலைவரை இழிவுபடுத்தி பேசி மற்ற கட்சிகளுக்கிடையே பிரச்சனையை உண்டாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் அமைகிறது. எனவே, மேற்படி சாட்டை துரைமுருகன் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, புகார்தாரர் 10.07.2024-ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் 34/2024 u/s 196(1), 192, 353, 111 (1) (2) BNS & 3 (1) (r) (s) of the SC&ST (Prevention of Atrocities) Act 1989- மேற்படி வழக்கின் எதிரி சாட்டை துரைமுருகனை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *