திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும். 19.02.2022 ந்தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பொருட்டு நாளை 22.02.2022ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காகவும்.
Live Link : https://youtu.be/-Mf0j2cDRhI
பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட மற்றும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய போக்கிரிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகரத்தில் உள்ள துணை ஆணையர்கள், மற்றும் உதவி ஆணையர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
Live Link : https://youtu.be/-Mf0j2cDRhI
அதன்பேரில் திருச்சி மாநகரத்தில் கண்டோன்மென்ட் சரகத்தில் 7 போக்கிரிகளும், கே.கே.நகர் சரகத்தில் 3 போக்கிரிகளும், பொன்மலை சரகத்தில் 7 போக்கிரிகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 6 போக்கிரிகளும், காந்தி மார்க்கெட் சரகத்தில் 7 போக்கிரிகளும், தில்லைநகர் சரகத்தில் 3 போக்கிரிகளும், ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் 33 குற்ற பிண்ணனியில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்பட்டு வருகிறர்கள்.
மேலும், திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க குற்ற பிண்ணனி உள்ள போக்கிரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn
Comments