திருச்சி மாவட்டம், சமயபுரம் நால்ரோடு அருகே 2 அரசு டாஸ்மாக் கடைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அருகே சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே குப்பைத்தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இருப்பினும் போலீசார் வருவதை அறிந்த மது விற்ற 2 பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சோதனையிட்டனர். அதில் 42 மது பாட்டில்கள் போலி மதுபாட்டில்களாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை சமயபுரம் போலீசார் தற்போது கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments