Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நிவர் புயல் எதிரொலி – ரயில் மற்றும் பேருந்துகள் ரத்து !

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புயலில் நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புது தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, சென்னைக்கு அருகில் 520 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், இது நாளை புயலாக மாறி நவ.25ம் தேதி அதி தீவிர புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 24-ம் தேதி சென்னை – தஞ்சாவூர் (Train NO : 06866), தஞ்சாவூர் – சென்னை (Train NO : 06865) இடையேயான ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேப்போன்று நவம்பர் 25-ம் தேதி சென்னை – தஞ்சாவூர் (Train NO : 06866) , சென்னை – திருச்சி (Train NO : 06795) , திருச்சி – சென்னை (Train NO : 06796) ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் மைசூர் – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – மைசூரு, ஏர்ணாகுளம் – காரைக்கால், காரைக்கால் – ஏர்ணாகுளம், கோயம்புத்தூர் – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – கோயம்புத்தூர், புவனேஷ்வர் – பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி – புவனேஷ்வர், பாண்டிச்சேரி – ஹவுரா ஆகிய ரயில்களில் குறிப்பிட்ட பகுதிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Responsibility

இதேபோல பேருந்துகள் நாளை மதியம் ஒரு மணி முதல் நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை நாகை தஞ்சாவூர் திருவாரூர் கடலூர் செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *