திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரின் பிரதான சாலையாக உள்ள ரெனால்ஸ் ரோடு சரவணன் நினைவுத்தூபி அருகிலுள்ள சாலையில் நடுவே பெரிய பள்ளம் இருந்தது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர்.
தொடர்ந்து இந்த அபாயகரமான பள்ளத்தை பெரிய கற்கள் மற்றும் மரக்கிளைகளை கொண்டு இந்த பள்ளத்தை மூடி இருந்தனர்.அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிரமம் குறித்து நேற்று (11.10.2021) திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது.
இதனையெடுத்து கற்கள் மற்றும் மரக்குச்சிகளை கொண்டு மூடப்பட்டிருந்த பள்ளத்தை மாநகராட்சியினர் கான்கிரீட் தளம் போட்டு மூடி உள்ளனர். வாகன ஓட்டிகள் பாதிப்பு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சியால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். திருச்சி மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு திருச்சி விஷன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments