Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

திருச்சியில் இயற்கை சூழல் காக்கும் பெண் மருத்துவர் அங்காடி (ecotopia)

பூமியை பாதுகாப்பதில் அதிக அக்கறை மனிதர்களுக்கு உண்டு ஆனால் நாம் செய்யும் சிறு செயல்கள் கூட  பூமியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
காலநிலை மாற்றங்கள் புவி வெப்பமயமாதல்  இவை அனைத்தும் நம் வாழ்வியல் சூழலை மாற்றுகின்றன .புவி வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணம் காடுகள் அழிவு  பிளாஸ்டிக் பயன்பாடும்  தான்.

தனிமனிதனாய் இந்த பூமியை பாதுகாக்கா விடினும் பூமியை பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு  நம்முடைய பங்கை சரியாக செய்ய வேண்டுமென்று பிளாஸ்டிக்கில்லா பயன்பாடு என்பதை வீட்டில் பயன்படுத்தத் தொடங்கினேன் . நம் வீட்டில் எடுக்கும் முயற்சி மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதான் இந்த இகோடோப்பியா (Eco topia) இயற்கை அங்காடி என்கிறார் நிறுவனர் மருத்துவர். பாரதி பவஹரன்.

திருச்சி தில்லைநகரில் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்நிறுவனம் பற்றி மேலும் தொடர்கிறார். காலை எழுந்தவுடன் பல் துலக்கும் பிரஷ் இல் தொடங்குகிறது நம்முடைய பிளாஸ்டிக் பயன்பாடு அங்கிருந்து நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மாறிப் போன சூழலில் அதனை மாற்றும் பொருட்டு மூங்கில் மற்றும் வேப்ப மரங்களில் செய்யப்பட்ட பிரஷ், வேதிப்பொருள் கலக்காத கிருமிநாசினிகள், பேப்பர் பென்சில், இயற்கை உணவுப்பொருட்கள், விதைப்பந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட தாள்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம்.

எல்லாமே பிளாஸ்டிக் இல்லா பொருள்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். இந்தியாவின் பல இடங்களில் இருந்து தயாரிக்கப்படும் கைவினை கலைஞர்கள் தங்களது வீடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்து விட வேண்டும் என்றும் இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்க வகை செய்ய வேண்டும்   என்று செய்து வருகிறோம். கடையில் முன்புறத்தில் ஜீரோ வேஸ்ட் ஜூஸ் பார் சைக்கிளின் சுழற்சி மூலம் இயங்கும் பழச்சாறு இயந்திரத்தை வைத்துள்ளோம்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வும் பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு என்ற நோக்கில் பழச்சாற்றினை அந்தப் பழத்திலேயே கப்பாக மாற்றி பயன்படுத்துவதும் மூங்கில்களை ஸ்ட்ராவாக  பயன்படுத்தியும் வருகிறோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார். நம் அடுத்த தலைமுறைக்கு இந்த பூமியில் நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்பதை விட இந்த பூமியை நாம் எவ்வாறு விட்டுச் செல்கிறோம் என்பது மிக முக்கியமானது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *