Wednesday, August 20, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாடகை கட்டடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயில வழிவகை செய்யப்படும். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அருகேயுள்ள கலையரங்கத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்… நிலத் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் நியம கோரிக்கையை வைத்துள்ளார்கள். நாங்கள் அதனை நிறைவேற்றுவோம்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது பழமையான பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் போது வாடகை கட்டடங்களில் பள்ளி மாணவர்களை அமரவைத்து கல்வி பயில வழிவகை செய்யப்படும். திருச்சியில் 410 பள்ளிகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை இடித்து பின்னர் புதிய கட்டுமான பணிகளை துவக்குவோம். பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகள் இணைந்து குழுவாக பள்ளி கட்டிடங்களை இடிக்கும் இந்த பணியில் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் 75 கோடி ஒதுக்கினார்கள். இதற்காக ஒதுக்கி இருந்தார்கள் தற்போது 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். நெல்லை விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிகழ்வு மிகவும் வருந்தக்கூடிய ஒன்று. இது அரசு பள்ளிக்கு மட்டுமல்ல தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எந்த பள்ளியாக இருந்தாலும், கட்டிடங்களின் ஆய்வு என்பது தரத்தை ஆய்வு செய்வோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *