திருச்சி மாநகர் மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட மருத்துவர் சமூக நல சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வழங்கும் விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஆர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியை கவிஞர் திருவைகுமரன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கவுரவத் தலைவர் சிங்கப்பூர் ஜெய் கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 152 பேருக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் மற்றும் உதவி தொகை வழங்கினார். இதில் தர்மலிங்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் துணைத் தலைவர் குஞ்சுவேல், கோபி, மோசஸ் ஸ்டாலின், பொன்னுச்சாமி, சுரேஷ், துணைச் செயலாளர் மதியழகன், ராமமூர்த்தி, ரங்கராஜ், அசோக் பாண்டியராஜ், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர்கள் சண்முகசுந்தரம், செயலாளர் சுரேஷ், பொருளாளர் கலைமணி, தெற்கு மாவட்ட தலைவர் தங்கவேல், செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவினை இளைஞர் அணி நிர்வாகிகள் சரவணக்குமார். ஆர்.சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், கோபிநாத், செந்தில்குமார், கலைச்செல்வம், கார்த்திக், விவேக், முருகேசன், குணசீலன், சதீஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments