மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) திட்டத்தின் ஒரு செயல்பாடாக இன்று HIV நோய் தொற்றுடன் வாழும் குழந்தைகளின்/ எச்.ஐ.வி உடன் வாழும் பெற்றோரின் பிள்ளைகளுக்கும், கல்வி மேம்பட அவர்களுக்கு தேவையான பள்ளி புத்தகப்பை, தண்ணீர் பாட்டில், பேனா பென்சில், பென்சில் பாக்ஸ் அத்துடன் ஓவ்வொரு மாதமும் வழங்கப்படும் சத்தான உணவு பொருட்கள் டோல்கேட் திட்ட அலுவலகத்தில் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர். மணிவண்ணன் MBBS, மவட்ட திட்ட மேலாளர் (பொ) & ART மருத்துவ அலுவலர் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். அதில் எதிர்கால இந்தியாவின் நலன் குழந்தைகள் கையில் உள்ளது என்பது பற்றி விரிவாக பேசினார். இந்நிகழ்ச்சியை PDI திட்ட இயக்குநர் முனைவர். அம்பலவாணன் M.A B.L., Ph.d தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை முத்துக்குமார் PDI-TI திட்ட மேலாளர் மற்றும் TI திட்ட பணியாளர்கள் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments