Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

எடுபடுமா எடப்பாடியார் அரசியல் – ரெக்கை கட்டி பறக்குமா அண்ணாமலை கொடி!!

என் மண் – என் மக்கள் யாத்திரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் கொளுத்திப்போட்ட வெடி தீபாவளி வரை ஓயாதுபோல, வைத்த குண்டு கூட்டணிக்குளேயே வெடிக்க டெல்லி தலைமை அழைப்பை ஏற்று டெல்லியில் முகாமிட்டுள்ளார் அன்ணாமலை, டெல்லியில் அவர் முதன்முதலில் சந்தித்தது நிர்மலா சீத்தாராமன் என்றாலும் எதற்காக அவரை சந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழவே நமது வட்டாரத்தில் விசாரித்தோம், அண்ணாத்துரையை ஆலயத்தில் வைத்து அதிரடி காட்டினார் தேவர் என அண்ணாமலை பேசிய பேச்சுதான் அதிமுகவினரை அதுவும் தேர்தல் வரும் நேரத்தில் இந்த சர்ச்சை பேச்சு தேவையா என்பதால்தான் இத்தனை குழுப்பம்.

நிர்மலா சீத்தாரமனிடம் தாங்கள் மதுரை மண்ணில் பிறந்தவர் என்பதால் உங்களுக்கு இந்த உண்மை தெரியும் ஆகவே உங்களிடம் என்னுடைய தன்னிலை விளக்கத்தை அளிக்கவே வந்தேன், மேலும் கொங்கு மண்டலத்தில் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு பலம் இருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள், ஆட்சியையும் இரட்டை இலையையும் நாம்தான் காப்பாற்றிக்கொடுத்தோம் என்ற நன்றி உணர்வு அவரிடம் துளிகூட இல்லை.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி யாரால் வீழ்ந்தது என்பதற்கான புள்ளி விபரங்களை சேகரித்துக்கொடுத்துள்ளார் என்கிறார்கள் நான் தலைமையுடன் பேசும் பொழுது நீங்களும் இருக்கவேண்டும் யார் யாரோ எப்படி எப்படியோ கட்டிக்காப்பாற்றிய அதிமுகவை அழிக்க பார்க்கிறார் எடப்பாடியார் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இருமுறை முதல்வராக ஓ.பி.எஸ்ஸை நம்பி ஆட்சியை ஒப்படைத்து சென்றார் ஏன்? உங்களுக்கு தெரியாதது அல்ல என்னைவிட நீங்கள் வயதிலும் கட்சியிலும் அனுபவத்திலும் மூத்தவர் நாம் தவறு செய்துவிட்டோம் எடப்பாடியை வளர்த்துவிட்டது நம் தவறு அதற்க்கான தண்டனையைத்தான் தற்பொழுது அனுபவித்து வருகிறோம் என தன்னுடைய மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அனைத்தையும் நிதானமாக கேட்டுக்கொண்டதோடு நோட்ஸ்ஸீம் எடுத்திருக்கிறார் நிர்மலா சீத்தாராமன் என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.

நெய் திரண்டு வரும் வேளையில் தாழியைப்போட்டு உடைக்கப்பார்க்கிறார் எடப்பாடியாரை நாம் அவரை முழுவதாக நம்பியது தவறு அதற்கு நமக்கு அவர் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்றதோடு ஓ.பி.எஸ்., தினகரன் இருவரையும் கூட்டணியில் சேர்க்க முட்டுக்கட்டை போடுகிறார் அவ்வாறு அவர்களை சேர்த்தால் தன்னுடைய பலம் குறைந்துவிடும் என நினைக்கிறார் தென்மாவட்டங்களில் ஓ.பி.எஸ் வெற்றியைத்தேடித்தந்து விட்டால் அதிமுகவில் தன்னுடைய பதவி பறிபோய்விடும் என எனக்குமுறி இருக்கிறாராம்,

இந்நிலையில் இன்று நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது, ஏன் எதற்கு எப்படி என்ன நடக்கும் இனி, என்பதற்கான விடைகள் தெரிய காத்திருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் அண்ணாமலை தான் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள் டெல்லி வாலாக்கள். அண்ணாமலையில் கோரிக்கை ஏற்கப்பட்டால் அண்ணாமலைக்கு தன்னிச்சையாக அதிகாரம் வழங்கப்படும் அவர் சொல்லும் ஃபார்முலா ஒர்கவுட் ஆனால் மீண்டும் ஒருமுறை தமிழக தலைவராக நீட்டிப்பு வழங்கப்படும் என்கிறார்கள். ஆகவே பாஜக, புதிய தமிழகம், ஓ.பி.எஸ்., டிடிவி, ஏ.சி.சண்முகம், ஜி.கே.வாசன் ஆகியோரோடு கூட்டணி சேர்ந்து வேறு எவரேனும் வந்தால் அவர்களையும் கூட்டணியில் இணைக்க தயாராக அண்ணாமலை இருப்பதாக கூறுகிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதோடு எனது முயற்சி கை கூடவில்லை என்றால் நான் அரசியலுக்கு கை கழுவிவிட்டு என் வேலையை பார்க்கப்போகிறேன், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என அறுதியிட்டு கூறிவருகிறாராம். இன்றைக்கு கிடைக்கும் கிலாக்காயைவிட நாளை கிடைக்கும் பலாக்காய்தானே சிறந்து என நினைக்கிறார்கள் பாஜகவினர் அதே எண்ணத்தில் மணியான அமைச்சர்களும் இருப்பதாகவே கூறுகிறார்கள் விஜயம் எங்கே என்றாலும் நமக்கு ஓகே என இருதலைக்கொல்லி எறும்பாக இரு அமைச்சர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.

புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி என பொங்கி எழுத்தயாராகிவிட்டார் அண்ணாமலை என்கிறார்கள். டெல்லியில் இருந்து திரும்பி வந்தவுடன் பேச்சும், வீச்சும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *