மணப்பாறை அருகே தாழ்வாக கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் செ ன்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் 65.இவர் இன்று காலை தோட்டத்திற்குச் சென்ற பொழுது நேற்று இரவு இப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக இருந்ததை கவனிக்காமல் சென்றதால் மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments