இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற (19.04.2024) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் இன்று (10.04.2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் முள்ளங்கி, சேனைக்கிழங்கு, கேரட், பீட்ருட், முட்டைகோஸ், சுரைக்காய் போன்ற காய்கறிகள், புதினா மற்றும் தர்பூசணி பழங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை மற்றும் தர்பூசணி பழங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் செதுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (10.04.2024) நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ந.சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments