Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தபால் வாக்குகளை பதிவு செய்யும் இடத்தில் தள்ளுமுள்ளு -மூச்சு திணறிய பயிற்சி அலுவலர்கள்

திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் 15 ஆயிரத்து 144 தபால் வாக்குகள் உள்ளது.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சுமார் 3900 தபால் வாக்குகள் உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்சியில் தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அப்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை,லால்குடி துறையூர் ,மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற தொகுதியில் இருந்து அரசு ஊழியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த தனியார் கல்லூரியில் ஒரு சிறிய கட்டிடத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் தபால் வாக்குகளை பெறுவதற்கு ஒரே அறைக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது உள்ளே சென்று தபால் வாக்குச் சீட்டை பெற்று மீண்டும் அதே அறைக்குள் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் .அதில் ஆயிரக்கணக்கான குழுமியிருந்தனர் மூச்சு முட்டும் அளவிற்கு தேர்தல் அலுவலர்கள் உள்ளே இருந்ததை காண முடிந்தது.

தற்பொழுது தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை சீர் செய்வதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார். கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் முக கவசம் இல்லாமல் அதிகமானோர் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு தபால் வாக்குகளை பதிவு செய்யும் நிலை இருந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *