Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் 2025 – மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி (01.01.2025)-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் (16.11.2024), (17.11.2024), (23.11.2024) மற்றும் (24.11.2023) ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக வாக்குச்சாவடி மையங்கள்) 2025-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கங்கள்/திருத்தங்கள்/இடமாற்றம் செய்ய தகுதியுள்ள குடிமக்களுக்கான படிவங்கள் 6. 6B, 7 அல்லது 8 ஆகிய படிவங்கள் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கப்பெறும். 

இப்படிவங்களை பூத்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான விண்ணப்பங்களை (16.11.2024) முதல் (08.12.2024) வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் எனவும், பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி சான்றாக கீழ்காணும் ஆவணங்களில் எதேனும் ஒன்றினை அளிக்கலாம்.

1. ஆதார் அட்டை/குடும்ப அட்டை

2. முகவரிக்கான குடிநீர்/மின்சாரம்/ எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 வருடத்திற்காவது)

3,தேசிய மயமாக்கப்பட்ட/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி/அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம்

4. கடவுச்சீட்டு

5. விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப்பதிவுகள். 

6. பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம்(குத்தகைதாரராக இருந்தால்)

7. பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம்(சொந்த வீடு எனில்).

வயது சான்றாக சய சான்றொப்பமிட்ட கீழ்காணும் ஆவணங்களில் எதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்:-

1. தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு/நகராட்சி அதிகாரி/பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய 

1,பிறப்பு சான்றிதழ்

2. ஆதார் அட்டை

3, அட்டை (PAN Card)

4,ஒட்டுநர் உரிமம்

5. சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி/மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரென்டாம் வகுப்பு சான்றிதழ்கள் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், அதில் பிறந்த தேதி இருந்தால்

6. இந்திய கடவுச்சீட்டு (Passport).

(01.01.2025) அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, (31.12.2006) அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயதுச்சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். https://voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELP LINE Mobile App) ஆகியற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் மற்றும் ஒரு நபரின் பெயரினை சேர்க்க ஆட்சேபணைக்கான வாக்காளர் விண்ணப்பம் மற்றும் படிவம் 7 இல் விண்ணப்பிக்கலாம். மேலும் தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தாலோ அல்லது வாக்காளரின் விபரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல்/திருத்தம்/

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்ப அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8 இல் விண்ணப்பிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *