புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் திருச்சியில் தனது மகனுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்து லாசன்ஸ் சாலையில் திரும்பிய போது அவருக்கு மயக்கம் வந்துள்ளது. கண்பார்வையும் மங்கியதால் நிலை தடுமாறிய அவர் சாலையில் இடது புறத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது கார் மோதி நின்றது .பின்பு மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் இருந்தது. சாலையில் மின் ஒயர்கள் கிடந்ததால் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல் விரைந்தனர்.
அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதி வழியாக செல்வோர்களை வேறு பாதை வழியாக திருப்பி விட்டனர். சுமார் 30 நிமிடம் அச்சாலையில் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தற்போது சீராகி உள்ளது.
மின் ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்த போது பொதுமக்கள் யாரும் அச்சாலையில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments