திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ராஜ்குமார் நகரை சேர்ந்தவர் சாம்சன்( 63 ) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறிய போது சறுக்கி விழுந்துஉள்ளார்.
அப்பொழுது அவர் அணிந்திருந்த பணியன் மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டுள்ளது.இதில் சாம்சன் கழுத்து இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சாம்சன் உயிரிழந்தார்.
இவருக்கு ஷில்பா என்ற மகளும் சிபின் என்ற மகனும் உள்ளனர் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது மகள் கேரளாவில் உள்ளார்.நிலையில் சாம்சன் மகன் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். மகன் மும்பையில் உள்ள ஒரு ஐடி கம்பெனிகள் வேலை பார்த்துவருகிறார்.
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments