திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த முசிறி தாலுகா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (41). திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள மின்வாரியத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்,
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், வலி தாங்க முடியாமல் புலிவலம் பகுதியில் உள்ள வனக்காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவலறிந்த அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் செல்வேந்திரன் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments