திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் எல்பின் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும், நிலம் தருவோம் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை கூறி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று ஏமாற்றி விட்டனர். இதையடுத்து எல்பின் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை மற்றும் சென்னை ஆகிய 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் கடந்த பல்வேறு காலகட்டங்களில் பதியப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகளை விசாரிக்க கோர்ட்டு வழிகாட்டுதலின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. மேற்கூறிய நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தப்படாத, முறைப்படுத்தப்படாத வைப்புத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி வந்ததால், இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா என்கிற அழகர்சாமியை திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் திருச்சியில் கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே முந்தைய வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் நீதிமன்றம் நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவர் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றி பெறப்பட்ட பணத் தில் வாங்கிய அசையா சொத்துக்கள் பற்றியும்,
இந்த சொத்துக்களை வாங்க முன்பணம் யார், யாரிடம் கொடுத்தார் என்ற விவரம் பற்றியும் கூறியுள்ளதாகவும், மேற்கண்ட சொத்துக்களை அரசுடைமை யாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜா என்கிற அழகர்சாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments