Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

சேவை வழங்க தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

அரசு குழந்தைகள் இல்லத்திற்கு 02 பணியிடங்கள் தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகாமல் மதிப்பூதியம் போக்குவரத்து செலவு உட்பட அடிப்படையில் ஒரு வருகைக்கு ரூ.1000/- மட்டும் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் ரோடு, மாத்தூர்(இ) திருச்சி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ (22.08.2024) அன்று பிற்பகல் 05:00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04339-250074 மற்றும் 6369104191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *