தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணிபுரியும், பணி ஓய்வுபெற்ற ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்படைத் தலைவர் சைலேந்திரபாபு, உத்தரவின்பேரில் மத்திய மண்டலத்தில் காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் G.கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி, வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் (25.03.2023)-ஆம் தேதியன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் திருச்சி மாநகரம் மற்றும் மத்திய மண்டலத்திலுள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி 1-ஆம் தமிழ்நாடு சிறப்பு காவலணி, ஆகியவற்றைச் சார்ந்த காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணிபுரியும் ஆளிநர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஆண்கள்-186, பெண்கள்-161 ஆக மொத்தம் 347 நபர்கள் கலந்துகொண்டனர். இதில் 73-நபர்கள் நேரடி பணிநியமனம் (Direct appointment) செய்யப்பட்டு. பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்றும் 181 நபர்கள் முதற்கட்டமாக (Provisionally selected) தேர்வு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட தேர்வுக்காக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (26.03.2023)-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற உள்ளது என மத்திய மண்டல காவல்துறைத்தலைவர் G.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments