பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு கல்வியோடு அவர்களுக்கு தொழில் சார்ந்த வருமானம் ஈட்டும் கைத்தொழில் கற்றுக் கொள்வது அவசியமானது.பெண்கள் கைத்தொழில்கள் மூலம் வருவாயை ஈட்டும் விதத்தில் அவர்களுக்கு தையல் பயிற்சி வழங்கியுள்ளது எனர்ஜி சாப்ஃட் சொல்யூஷன்.பெண்கள் தங்களுடைய வாழ்வில் தன்னால் முடிந்த அளவு தனித் திறமைகளையும் வளர்த்துக் கொண்டு தொழில் சுய தொழில் செய்பவர்களாகவும் தொழில் முனைவர்கள் ஆகவும் உருவாகுவதற்கு இது போன்ற பயிற்சிகள் உதவும்.
18 வயது முதல் 35 வரை உள்ளா பெண்களுக்கு மூன்று மாத காலம் தையல் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.இந் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ்களை தொழில்முனைவர் (வைர வியாபாரம்) மனோஜ் வழங்கி பயிற்சி பெற்ற அனைவரையும் பாராட்டி ஊக்கப்படுத்தி உள்ளார்.
எனர்ஜி சாப்ட் சொல்யூஷன் இயக்குனர் கார்த்திக் மற்றும் அனுசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments