திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அசுர் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (27). இவர் துவாகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சாமுவேல் (18) என்பவரும் இன்று தனது வீட்டிலிருந்து பூலாங்குடி காலனிக்கு மொபட்டில் சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது பழங்கனாங்குடிக்கும், பூலாங்குடிக்கும் இடையே உள்ள கட்டளை வாய்க்கால் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமார் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துள்ளார். இதில் ஜெயக்குமார் பலத்த காயமடைந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த சாமிவேல் லேசான காயம் அடைந்தார்.
இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் ஜெயக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
லேசான காயமடைந்த சாமுவேலுக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments