திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், பொழுது போக்கு கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம், பலதரப் பட்டபொழுதுபோக்குசேகரிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து மே 28 ஆம் தேதி காலை 9 முதல்மாலை 5 மணி வரை நடத்த உள்ள இந்த கண்காட்சியில் ரேடியோ அமெச்சூர் ரேடியோ, வான்கோள் கள், ரயில்வேதுறை, அஞ்சல் தலைகள், சுடுமண் சிற்பங்கள், தொல்லுயிர் எச்சங்கள், பழங்கால பொருள்கள்,இசைக்கருவிகள், மணி கற்கள் மற்றும் சங்க கால நாணயங்கள் ஆகியன இடம் பெற உள்ளன.
இவற்றை பொது அறிவை வளர்க்கும் பொழுதுபோக்கு கண்காட்சி சங்கத்தினர் காட்சிப்படுத்துகின்றனர்.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியை கண்டு பயன்பெறலாம் என மாவட்ட மைய நூலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments