Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

நிதி பற்றாக்குறையால் திருச்சியில் கிடப்பில் கிடக்கும் பொழுதுபோக்கு திட்டங்கள்

திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையங் களை அதிகரிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் அமைச்சர் நேரு அறிவுறுத்தி யிருந்தார்.

அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகள், அய்யாளம்மன் படித்துறை அரு கில் பறவைகள் பூங்காவும், பிராட்டியூர் குளம் சீரமைக்கப்பட்டு படகு சவாரி சேவையும் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இதில் பறவைகள் பூங்கா பணி நிறைவ டைந்து சமீபத்தில் திறப்பு விழா கண்டது. ஆனால், பிராட்டியூர் குளத்தின் நிலையில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்:பிராட்டியூர் குளம் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தகுளம் மழைக்காலங்களில் நிரம்பினால், சிறிய ஏரி போன்று காட்சியளிக்கும். இங்கு, கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து குளத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

இந்த குளத்தை துார்வாரி, கரைகளை பலப் படுத்தி, ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கவும், பொதுமக்கள் நடைபயிற்சி தளமாக மாற்றவும், குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்களுடன் பூங்கா, திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், பெரியவர்கள் அமர்ந்து பொழுதை கழிக்க போதுமான இருக் கைகள், படகுசவாரி என மெகர் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு அக்.5ம் தேதி அமைச்சர் நேருவும், கலெக்டர் பிரதீப்குமாரும் பிராட்டி யூர் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னர் துார்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் ஒரு மாத காலம்வரை நடந் தது. 

சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. ரூ.12 லட்சம் செலவில் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் மீட்கப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் துார்வாரும் பணிக்கு பின்னர் வேறு எந்த பணியும் நடக் கவில்லை. ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் பிராட்டியூர் குளம் மீண்டும் கருவேல மரங்க ளால் ஆக்கிரமிக்கப்பட்டு அதே நிலையில் உள்ளது. 

இதனை போன்ற பேச்சு விமான நிலையம் அருகே உள்ள கட்டப்பட்டு கொடுத்தது படகு சவாரி அமைக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் கிடப்பில் உள்ளது 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அடுத்த கட்டபணிகள் தொடங்கப்படவில் லை என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *