Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சர்வதேச தடகளத்தில் டேக்வாண்டா போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு

நேபாள தேசிய விளையாட்டு அமைப்பு சார்பில் நேபாள நாட்டில் கடந்த ஏப்ரல் 27 தேதி முதல் 30ம் தேதி வரை சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான தடகளப்போட்டிகள் மற்றும் கபாடி போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டுஎறிதல் மற்றும் வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக பங்காற்றியவர்கள் தகுதிஅடிப்படையில் பங்கேற்றிருந்தனர்.

இதில் திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்துள்ள எலமனூரைச் சேர்ந்த அண்ணாதுரை – கமலா தம்பதியினரின் மகன் அன்புதுரை பங்கேற்றார். இதில் பலநாடுகள் பங்கேற்றாலும் தனது திறமையினால் மற்ற வீரர்களை வீழ்த்தி புள்ளிகளின் அடிப்படையில் தங்கப்பதக்கம் வென்றதுடன், தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். தந்தையை இழந்து, தாயார் தற்காலிக ஆசிரியராக தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் நிலையில் டேக்வாண்டா மீதுள்ள ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்று நேபாளத்தில் போட்டியில் பங்கேற்க தாயார் மற்றும் அவருடன் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.

தொடர்ந்து கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டுள்ள ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கபதக்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக தங்கம் வென்று கிராமத்திற்கு வருகை புரிந்த வீரர் அன்புதுரைக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராமமக்கள் வெடிவெடித்தும், கேக்வெட்டி, சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *