தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி திருவெறும்பூர் தொகுதி அமைந்துள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள ஏழை – எளிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அப்பகுதியில் உள்ள ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 ஆவது வார்டு நியாயவிலை கடை பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்
அப்பகுதியில் உள்ள 1365 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி சேலை, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் நீலமேகம்,
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயராமன், திருச்சி கிழக்கு தாசில்தார் குணசேகரன், கூட்டுறவு சார்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் சகிப்புல்லா அமராவதி மேலாளர் கபிலன் மற்றும் அரசு அதிகாரிகள் , வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments