திருவெறும்பூர் பெயர் வரக் காரணமான எறும்பீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக திருதேரோட்டம் நடந்தது. திருவெறும்பூர் அருகே மலை மேல் வீற்றிருக்கும் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்றது.
பழமையும் பெருமையும் கொண்ட இக்கோயில் வைகாசி விசாகப் பெருந் திருவிழா கோயில் இடபக் கொடியேற்றத்துடன் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது.அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்நிலையில் 8ம் தேதி வைகாசி விசாக பெருந்திருவிழா முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நடந்தது.இந்த திரு தேரோடம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலை கோவிலில் சாமி தரிசனம் செய்து தேரை தொட்டு கும்பிட்டு சென்றார்.
மலை கோவில் தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக அதன் உரிமை உள்ள நவல்பட்டு மற்றும் மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மேளதாளங்கள் வான வேடிக்கையும் முழங்க கோவிலுக்கு வந்தனர்.பின்னர் திரு தேரில் எழுந்தருளி உள்ள நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் திருத்தேரை காலை 9.50 மணிக்கு வடம் பிடித்து இழுத்து ராஜவீதியில் இருந்து தெற்கு வீதி, மேலவீதி , வடக்கு வீதி, வழியாக மீண்டும் ராஜ வீதியில் நிலையை வந்து அடைந்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். செயல் அலுவலர் வித்யா, திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு கவுன்சிலர் சிவகுமார் மற்றும் திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments