Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு!

தேசிய காவலர் கொடி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன்,
 உத்தரவுப்படி “தேசிய கட்டமைப்பில் காவல் துறையின் பங்கு” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி இரு பிரிவுகளாக ( பிரிவு- 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் பிரிவு-2 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) நடத்தப்பட்டது. வயது வாரியாக இணையவழி கட்டுரை போட்டி கடந்த 21/10/2020 முதல் 29/10/2020 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வயதுடைய 183 பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள். 

Advertisement

 இப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா இன்று திருச்சி மாநகர காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

வெற்றி பெற்ற குழந்தைகளின் விவரம்:

• பிரிவு 1- 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் முதல் பரிசை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த S. கனிகா என்ற மாணவியும், 2ம் பரிசை திருச்சி தென்னூரை சேர்ந்த H. வர்ஷிதா என்ற மாணவியும் 3 ஆம் பரிசை திருச்சி ஸ்ரீரங்கம், மேலூரைச் சேர்ந்த  A. S. ஆருத்ரா என்ற மாணவியும் வென்றுள்ளனர். 

Advertisement

பிரிவு 2- 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த K. சந்தியா என்ற மாணவியும், 2 ஆம் பரிசை திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த J. கருப்பசாமி என்ற மாணவரும், 3 ஆம் பரிசை தஞ்சாவூர் புதுக்குடியைச் சேர்ந்த L. உமா ராணி என்ற மாணவியும் வென்றுள்ளனர். 

இப்பரிசளிப்பு விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் தலைமை தாங்கி மேற்கண்ட வெற்றி பெற்ற ஆறு மாணக்கர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். மேலும், இவ்விழாவில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு A. பவன் குமார் ரெட்டி, காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து R. வேதரத்தினம், கூடுதல் காவல் துணை ஆணையர் D. ரமேஷ் பாபு, திருச்சி மாநகர ஊர் காவல் படை வட்டார தளபதி ராஜா, நடுவர்கள் முனைவர் அந்தோனி துரை ராஜ், கல்வியாளர், திருச்சி , ஸ்டீபன், முதுகலை தமிழ் ஆசிரியர், நஸ்சரத் மேல்நிலைப் பள்ளி, மணிகண்டம், திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். 

 இப்போட்டியின் போது மாணாக்கர்களுக்கு காவல் துறையின் மீதுள்ள நம்பிக்கையும், ஈடுபாடும் கண்டறியப்பட்டு, அவர்களின் திறனை ஊக்கப்படுத்த மேலும் இதுபோன்ற போட்டிகள் வருங்காலங்களில் நடத்தப்பட உள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *