Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை தினமே- காவலர் சௌகத் அலி!!!

கொரோனா காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக தன்னலம் கருதாமல் உழைக்கும்  காவல்துறையின் பணியும் போற்றுதளுக்குரியது.
 தனிமனிதனின் மகிழ்வைத்தாண்டி   மக்களுக்காக உழைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது  என்று  உழைத்துக் கொண்டிருப்பவர்களினை  முன் களப்பணியாளர்கள் என்று கூறுவது மிகையாகாது.

 முழு ஊரடங்கு நேரத்திலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு பகல் பாராது உழைக்கின்றனர்  காவலர்கள்.
 அதிலும் இன்று ரமலான் தினம் தங்களுக்கான பண்டிகை  நாட்களில் கூட மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர்  அவர்களின் பிரதிநிதியாக நம்மோடு தன் பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளார் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் காவலர்   சௌகத் அலி.

என்னுடைய 13ஆண்டுகால பணியில் மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழலை பார்த்ததில்லை.

மக்கள் அனைவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எங்களுக்கு பண்டிகைகள்  எல்லாம்   நினைவிலேயே  இல்லை. 
  எங்களுக்கு மக்கள் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ மக்களுக்கு எப்போது இந்தத் பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பான சூழலில் சாதாரண வாழ்வியல் சூழலுக்கு வாழும் நிலையை  பெறுகிறார்களோ அன்றுதான்  பண்டிகை தினம் .
 நான் பெரும் கடலில் ஒரு துளி தான் என்னைப் போன்று உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். 
 மக்களின் பாதுகாப்புக்காக அவர்களை வழிநடத்தும் பொழுது எங்களை எதிரியாக தான் அவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்களின்  நன்மைக்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் உணரும் பொழுது தான் எங்களுக்கு மகிழ்ச்சி. 
முதல் அலையை  விட இரண்டாவது அறை தொற்று  பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது அரசும் , மருத்துவர்களும்  தங்களால் முடிந்த அளவிற்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் மக்கள் முதல் அலையைப் போல எப்படியாவது கட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள தவறி சட்ட ஒழுங்கையும் மீறுகின்றனர்.

இளைஞர்கள்  தங்களுக்கு ஏதும் ஆகாது என்று வெளியில் சுற்றித் திரிகின்றனர்  ஆனால் அவர்களால் அவர்களது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் சூழல் உருவாகிறது.
  மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்தால் தெரியும் மருத்துவர்கள் படும்பாடும்  அவல நிலையும்.மக்கள்  சரியான வசதிகள் இல்லாமல் உயிரோடு சென்றவர்களை பிணமாக பார்க்கும் அளவுக்கு நோயிற் பாதிப்பு இருக்கின்றது.  மருந்து கிடைக்காமல் எத்தனை பேர் உயிருக்கு போராடுகிறார்கள்.  ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் மக்கள் கதருகின்றனர்.

 இதற்கெல்லாம் காரணம் மக்கள்  தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் அலட்சியமாக இருந்தது இதை  அவர்கள் எண்ணி உணர்ந்தாலே எங்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரும் உதவியாக இருக்கும். 
அரசும் காவல் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வெயில் காலத்தில் மக்களுக்காக சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர்கள்  ஏராளமானோர்.
இந்த பாதிப்பு அனைத்தையும் தடுப்பதற்கு  அரசு கடுமையான நடவடிக்கைகளை கடந்த ஆண்டு போல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் ஏனெனில் அப்பொழுதுதான் மக்கள் வெளியில் வராமல் தடுப்பதற்கு இயலும் மக்களுக்கு அபராதம் அதிகளவில் விதிக்கப்படுவது அவர்கள் பயந்து த தங்களை பாதுகாப்பாக .வைத்துக் கொள்வார்கள் என்று எண்ணி தான் ஆனால் அதையும் மீறுபவர்களை   பார்க்கும்போது சற்று கவலையாகத்தான் இருக்கிறது. மக்கள் சரியாக சட்ட ஒழுங்கை பாதுகாத்தால் அவர்களோடு இணக்கமான முறையில் எங்களாலும் பணியாற்ற முடியும் ஆனால் அவர்களின் ஒத்துழைப்பின்றி எதுவும் சாத்தியப்படாது. 

உங்களுக்காக உழைக்கும் எங்களை உங்களில் ஒருவர் என்று எண்ணிபார்த்தாலே   எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வந்துவிடும் என்கிறார். தன்னலம் கருதாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை முன்கள பணியாளர்களும் மக்களின்  கதாநாயகர்களே!!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *