திருச்சி மாநகர் மாவட்ட பாஜக இளைஞர் அணி முன்னாள் நிர்வாகி, வினோத். இவர் திருச்சி உறையூர் பகுதியில் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அருகிலுள்ள நீட் பயிற்சி வகுப்பிற்கு வந்த 17 வயதுள்ள பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியுள்ளார்.
திடீரென அந்த சிறுமியிடம் பேசுவதை வினோத் நிறுத்திவிட்டார். அந்த சிறுமி வினோத்திடம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments