திருச்சி எடமலைப்பட்டி புதுார் பகுதியில் பாலத்தின் கீழ் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரியானது திடீர் என தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த லாரி உரிமையாளர் யார்? தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து எடமலைப்பட்டி புதுார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு லாரி அருகே இருந்த குப்பைகளை எரித்த போது அதிலிருந்து தீ பரவி லாரி எரிந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments