உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை ஆல்பா கேம்பிரிட்ஜ் சர்வதேச பள்ளியால் கொண்டாடப்பட்டது. புகைப்படக் கண்காட்சியை நிகழ்வின் தலைமை விருந்தினராக திருச்சி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்க தலைவர் ஆதி சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ஆல்பா நிறுவனங்களின் பெருமைமிக்க முன்னாள் மாணவர்களான வெங்கடேஷ், கேண்டிட் கார்னிவல் பிரைவேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சுதந்திரன், வணிக மேம்பாட்டு மேலாளர், கேண்டிட் கார்னிவல் பிரைவேட் லிமிடெட், கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் மாணவர்களால் எடுக்கப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
உலக புகைப்பட தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு பள்ளியால் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments