Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பயன்பாட்டில் இல்லாத கள்ளிக்குடி காய்கறி சந்தையை போக்குவரத்து மையமாக மாற்ற ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகன்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிக்குடி கிராமத்தில் ரூபாய் 77 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் பழங்கள் சந்தை கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் சர்வதேச சரக்கு ஆபரேட்டர்கள் சந்தையில் ஒரு பகுதியை சர்வதேச சரக்கு மையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த கொரானா காலக் கட்டத்திலும் பல நாடுகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. திருச்சி கள்ளிக்குடி சந்தையில் இடத்தையும் அதன் ஏற்றுமதி வசதியும் பயன்படுத்திகொள்ள அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதனால் சர்வதேச ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிக்கும். மே 2018 முதல் நகரின் புற நகரில் உள்ள சந்தையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்தையோடு திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையோடு அரை வளைய சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளதால் திருச்சி விமான நிலைய ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த போக்குவரத்து மையமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

குறைந்த  விமான போக்குவரத்து சேவை இருந்தபோதும் 12 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்றுமதிக்கு கட்டாய ஒப்புதல்கள் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரிகளான APEDA. MPEDA செயற்கைக்கோள் அலுவலகங்கள் கள்ளுக்குடியில்  நிறுவலாம். குளிர் சேமிப்பு வசதி இருப்பதால் காய்கறிகள்   மட்டுமின்றி  இறைச்சி மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும் என்று சர்வதேச சரக்கு  ஆலோசகர் ஹரிமூர்த்தி கூறியுள்ளார்.

திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து நாட்டுக் காய்கறிகளையும் பழங்களையும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் அனுப்புவதற்கான சந்தைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த சந்தை மூலம் விவசாயிகள் ஏற்றுமதியாளர்களின் இணைக்கும் திட்டம் நம்பிக்கைகுறியது மற்றும் சாத்தியமானது.

சந்தையை பயன்படுத்துவதற்காக இருதரப்பினரையும் கலந்து ஆலோசிப்போம் என்று வேளாண் வணிகத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் புலம் பெயர்ந்தோர் அடங்கிய சர்வதேச சந்தைகளில் தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் தேவை இருப்பதால் சந்தையை பயன்படுத்துவது விவசாயிகளை கூட  காய்கறிகளை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும். உயிர் காக்கும் மருந்துகள் போன்றவற்றின் இறக்குமதிகள் மேற்கொள்ளவும் உதவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *