முகநூல் பக்கத்தில் சமீப காலமாக உயர் அதிகாரிகள் அனைவரின் பேரில் போலி கணக்குகளை துவங்குவதையே ஒரு சிலர் குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது திருச்சி மாவட்ட ஆட்சியரும் வந்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களின் பேரில் போலி முகநூல் கணக்கை ஒருவர் துவங்கி அதன் மூலம் பணம் பறிக்கவும் முயன்றுள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் தனது whatsapp ஸ்டேட்டஸில் தன்னுடைய முகநூல் பக்கம் இதுவல்ல யாரும் ஏமாற வேண்டாம் இது போலி முகநூல் கணக்கு என்னுடையது அல்ல என தெளிவுபடுத்தி உள்ளார்.
இது போன்று ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் போலி கணக்குகளை துவங்கி அதன் மூலம் பணம் பறிக்கும் செயலை சிலர் செய்து வருகின்றனர். இதனை தெரியாமல் சிலர் அப்பக்கத்தில் இணைவதும் உதவிகள் செய்வதும் பதிலளிப்பதும் நிகழ்கிறது. ஆட்சியர்கே அக்கவுண்ட்டை ஓபன் பண்ணி அதிர்ச்சிக்கு உள்ளாகி நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
உயரதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி போலி முகநூல் பக்கத்தை உருவாக்குபவர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments