Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அமைச்சர் பெயரை கூறி திருச்சியில் நடைபெற்ற போலி வேலை வாய்ப்பு முகாம் – பல லட்சம் மோசடி

தற்போது அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரிஷன், துப்புரவு தொழில், செவிலியர் பணி, கணினி உதவியாளர் கணினி ஆபரேட்டர்,  தூய்மை பணி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு  தல 42 ஆயிரம் வசூல் செய்து  40க்கும் அதிகமான நபர்களை ஏமாற்றியுள்ளனர்

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ஜோஸ்பின் ஒப்பந்த அடிப்படையில் வேலை முடிந்த பிறகு மீண்டும் பணி கிடைக்க காத்திருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அறிமுகமான நபர்கள் அரசு வேலை கிடைக்க பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதை அறிந்த ஜோஸ்பின் மற்றும் அவருடன் சேர்ந்த 28 நபர்களிடம் தலா 42 ஆயிரம் என மொத்தம் 11,76,000 ரொக்க பணத்தை ஜெயக்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஜெயக்குமார் என்பவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவாக திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெயரில் பேனர் அச்சடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளனர். இந்த தேர்வில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பணம் கொடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் ஒரு வருட காலம் ஆகியும்,  சொன்னபடி அரசு வேலை கிடைக்காததால் ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போது, உங்களுக்கு இன்னும் காலதாமதம் ஆகும் இல்லையென்றால் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது..

மேலும் தொடர்ந்து இதுபோன்று ஏமாற்றிய இந்த நபரை நடவடிக்கை எடுக்கக்கூறியும் அவரிடமிருந்து பணத்தை பெற்று தரக்கூறி கும்பகோணம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும் இந்த புகார் மனு அனுப்பப்பட்டது. தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகார் மனு தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் வேலை கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்ட பொழுது தங்களை ஆள் வைத்து மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். ஏற்கனவே அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்களை நிரந்தரம் செய்வதற்காக தான் இந்த பணம் வழங்கப்படுவதாக கூறி எங்களை ஏமாற்றினார்கள். கடந்த மாதம் நாங்கள் பணம் திருப்பி கேட்ட போது நான் நேரடியாக அமைச்சரை சந்தித்து பணி ஆணை பெற்று வருவதாகவும் அல்லது என்றால் 8 ஆம் தேதி பணம் திருப்பி தருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதுவரை பணம் திருப்பி தரவில்லை. எங்களை ஏமாற்றிய இருவரும் விசாரணைக்காக திருச்சிக்கு வந்ததால் நாங்கள் இன்று திருச்சி கண்டோன்மென்ட் நிலையத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *