திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (67). இவர் சீனிவாச நகரில் உள்ள மருத்துவர் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை வேலை முடித்து பேருந்தில் ஏறுவதற்காக வயலூர் மெயின் ரோடு வரும்பொழுது வெள்ளை சட்டை அணிந்த 60 வயது மற்றும் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் தீபாவளி நேரம் ஏன் செயின் கழுத்தில் போட்டு செல்கிறீர்கள் என கூறி 1.5 பவுன் செயின் பரிசில் போட்டு தருகிறோம் பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர்.
(செயினை எடுத்துக்கொண்டு) பர்சில் கூழாங்கல்லை வைத்து கொடுத்துள்ளார்கள். பேருந்து நிறுத்தம் சென்று பார்த்த பொழுது கூழாங்கல் இருக்கவே சரஸ்வதி தனது மகளுடன் உறையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதே போன்று கிராப்பட்டி காலனியயை சேர்ந்த ஹேமலதா. இவர் மெயின் ரோட்டில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது அதே ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்து நின்று கொண்டிருந்த வெள்ளை நிற சட்டை காக்கி நிற பேண்ட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் தாங்கள் போலீஸ் எனக் கூறி நகைகளை இப்படி போட்டுச் செல்லக்கூடாது எனவே நகைகளை கழட்டுங்கள்.
நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று கூறி ஹேமலதா அணிந்திருந்த 7.5 பவுன் தாலி செயின் மற்றும் 5 பவுன் எடையுள்ள இரண்டு வளையல்கள் என மொத்தம் 12.5 பவுன் நகைகளை கழட்டி பெற்று, போலீசார் என கூறிய நபர்கள் கற்கள் மற்றும் கவரிங் வளையல்கள் இருந்த மணி பர்சை ஹேமலதாவிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹேமலதா எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments