திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு pHH மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வழங்கல் பிரிவில் சனிக்கிழமை (08.01.2022) நடைபெற உள்ளது. இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் இணையதளம் மூலம் மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பம் செய்வதற்கு நேரில் செல்லலாம்.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) நலவாரிய உறுப்பினர் அட்டை இவற்றுடன் புகைப்படம் மற்றும் செல்போன் எண் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
18 வயது பூர்த்தியான மூன்றாம் பாலினத்தவர்களில் ஒரு நபர் தனியே வசிக்கும்பட்சத்தில் ஒரு நபர் குடும்ப அட்டை வழங்கப்படும். மூன்றாம் நாட்டவர்களுக்கு சமூகநல வாரியத்தால் விநியோகிக்கப்படும் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் இணைக்கப்படுவது கட்டாயமில்லை. புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் ஆவணங்கள் சிறப்பு முகாமிலேயே www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
புதிய மின்னணு குடும்ப அட்டை கோரும் மூன்றாம் பாலினத்தவர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையை விண்ணப்பித்து பயன் அடையலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments