Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அணைக்கு தண்ணீர் கொண்டு வர வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த டேம் நால் ரோட்டில், பொன்னணியாறு – கண்ணூத்து அணைகளுக்கு மாயனூர் கதவணையிலிருந்து காவிரி உபரி நீரினை குழாய் மூலம் நீரேற்றம் செய்யும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம்,வையம்பட்டி அருகேயும்
கரூர் மாவட்டம் கடவூர் அருகேயும் திருச்சி (ம) கரூர் மாவட்ட எல்லைப்பகுதியான முகவனூரில் பொன்னணியாறு உள்ளது. இந்த அணையின் நீர்பிடி நிலப்பகுதிகள் அனைத்தும் கரூர் மாவட்டத்தை சேர்ந்ததாகவும், ஆனால் அரசு அணையை ஆவணம் செய்தது திருச்சி மாவட்டமாகும். எனவே இது திருச்சி மாவட்டத்தை சார்ந்ததாகும்.

மழை பெய்து வீணாகும் காட்டாற்று வெள்ளத்தை சேமிக்கும் பொருட்டு அணை  தி.மு.க ஆட்சியில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 1970-ல் தொடங்கப்பட்டு 1975-ல் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இரண்டு மதகுகள் கொண்டது.ஒரு கால்வாயும் உள்ளது. சுமார் 10 கி.மீ நீளமுள்ளது. அந்த அணையின் பழைய ஆயக்கட்டு மூலம் சுமார் 275 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டில் சுமார் 1850 ஏக்கர் நிலமும், சுமார் 2100 ஏக்கர் நேரடி நீர்பாசனம் பெறுகிறது. 51 அடி நீர் கொள்ளளவு கொண்டது. அணை சுமார் 320 ஏக்கர் கொண்டது.

இந்த ஆறு  செல்லும் வழியில் தும்பச்சி ஆறு, மாமுண்டி ஆறு, அரியாறு போன்றவைகளுடன் இணைந்து பின் குடருமுட்டி ஆற்றுடன் இணைந்து காவிரியில் கலக்கிறது. மேலும் இவ்வணையின் மூலம் பல குளங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் மணப்பாறை பகுதியானது விவசாயம் அதிக அளவில் உள்ள பகுதியாகும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி ஆற்றின் வெள்ள கால உபரி நீரினை குழாய் நீரேற்றம் செய்யும் திட்டம் மூலம் பொன்னணி ஆறு மற்றும் கண்ணுக்கு அணைகளுக்கு  ஆய்வு பணிகள் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அன்றைய ஆட்சி தலைவர் (08.12.20) தெரிவித்து இருந்தார். ஆனால் அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

ஆனால் இன்று வரை ஆய்வு செய்யும் பணி தொடங்கவில்லை. தற்போது நீர்வளத் துறையினர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வளப் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மணப்பாறை பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை காவிரி பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகள் நீரேற்று இணைப்பு திட்டத்தினை ஆய்வுப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் திருப்பி அனுப்பி உள்ளது.

தமிழக அரசு  கவனம் ஈர்ப்பு  விதமாகவும், காவிரி பொன்னையாறு மற்றும் கண்ணூத்து அணைகள் குழாய் மூலம் நீரேற்று பாசன திட்டத்தை நிறைவேற்றி தந்திட வேண்டி பொன்னணி ஆறு பாசனப்பகுதி விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று டேம் நால்ரோடு பகுதிகளில் ஒரு நாள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஒருநாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *