திருச்சி மாவட்டம் லால்குடி மும்முடிசோழமங்கலத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்ட விற்பனைக் குழுவின் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக எள், உளுந்து மற்றும் பச்சை பயிறு தானியங்கள் மறைமுகம் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டிற்கானஎள், உளுந்து அறுவடை நடைபெற்று வருகிறது.
இதனால், தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள சுத்தம் செய்யப்பட்ட எள், உளுந்து உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி சரியான எடையில் வணிகம் நடைபெறவும், எந்த வித கமிஷன் இன்றி போட்டி விலையில் அதிக விலை பெற்று இலாபகரமான முறையில் விற்பனை செய்து பயன்பெறவும்
மும்முடி சோழமங்கலத்தில் அமைந்துள்ள லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து தானியங்களை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9489477173, 9965137998 என்ற எண்களை தொடர்புக்கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments