திருச்சி மாவட்ட காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் திஷிதர் பாலசுப்ரமணியம், கிசான் கிரெடிட் கார்ட் பற்றிய பல தகவல்களை விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் விளக்கியுள்ளார். பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான ஒரு சிறப்பு முயற்சியை மத்திய அரசு தொடர்ந்து வருகிறது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள சுமார் 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்குவதாக மோடி தலைமையிலான அரசு அறிவித்திருந்தது. இதுவரை 1.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி மதிப்பில் விவசாயக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்குவதற்கு முன் விவசாயிகள் விவசாய கடனாக 1.6 லட்சம் மட்டுமே பெற்று வந்தன.
இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் வரை 4 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் இதற்காக எந்தவிதப் பிணையம் தேவையில்லை அதே போல் வங்கிக்கு எந்தவித சான்றுகளும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை (KYC) திட்டத்திற்கான ஒரு படிவத்தை மட்டுமே நிரப்பினால் போதுமானது. இத்திட்டத்தை மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்திய மத்திய வேளாண்துறை அமைச்சர் மற்றும் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments