தலைநகர் டெல்லியின் எல்லை பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் தடுக்க முயன்றனர். அதில் 19 வயது இளம் விவசாயி மாவீரன் சுப்கரன் சிங் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
அவரின் அஸ்த்தியை டெல்லியில் இருந்து திருச்சி கொண்டு வந்து, 10.04.2024 இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி கோகினூர் தியேட்டர் அருகில் இருந்து துவங்கி கரூர் பைபாஸ் ரோடு, கலைஞர் அறிவாலயம், அண்ணா சிலை, காவிரி பாலம், மாம்பலசாலை, வழியாக அம்மா மண்டபம் சென்று காவிரி ஆற்றில் இறங்கி அஸ்த்தியை கரைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments