திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் வனத்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், துவரங்குறிச்சி வனச்சரகர் தினேஷ்குமார், மணப்பாறை வன பாதுகாவலர் மேரி லென்சி தலைமையில் நடைபெற்றது.
இதில் மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் எண்ணற்ற விவசாயிகள் கலந்து கொண்டு காட்டு விலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பு குறித்தும் இதில் இருந்து விவசாயத்தை பாதுகாத்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக குரங்கு, காட்டு எருமைகளால் ஏற்படும் விவசாய பாதிப்பை விவசாயிகள் கூறினர். வனத்துறையினர் அதற்கான தகுந்த உரிய நடவடிக்கையை எடுக்கப்படும் என கூறினர். மேலும் காட்டெருமைகள் வருவதை தடுக்க நீல் போ என்ற வனவிலங்கு விரட்டி பயன்படுத்தினால் காட்டெருமைகள் வருவது குறையும் என்றும் கூறினர்.
வனத்துறையின் சார்பில் மலை விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்பட்டசேதத்திற்காக 16 விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments