திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் பெண் விவசாயி கவுசல்யா ஆட்சேபனம் தெரிவித்தார்.
ஆட்சேபனம் தெரிவித்த பெண் விவசாயியை அய்யாகண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும் அடிக்க முயன்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர்க்கு முன்பு நடந்ததால் காவல்துறையினர் உள்ளே வந்து (தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி )
விவசாய சங்க பெண் தலைவியை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர்.
மற்ற விவசாயிகளும் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. அவர்களை சமாதானப்படுத்தி காவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமர வைத்தனர்
அய்யாக்கண்ணு மீது புகார் கொடுக்க கௌசல்யா (தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி ) முடிவு செய்துள்ளார். அவரிடம் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments