திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலுக்கு முன்னதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நெல்மணிகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ஒரு ரூபாய் என 40 ரூபாய் வசூலிக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகள் ஒரு ஏக்கர் நெல் பயிரிட்டு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் நிலையில் குவிண்டாலுக்கு தற்போது 1958 ரூபாய் பணம்தான் கொடுக்கப்படுகிறது. விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக முதல்வர் உடனடியாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 2,500 ரூபாய் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் நெல்மணிகளை கீழே கொட்டி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
Comments